உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கெலமங்கலத்தில் பட்டாளம்மனை எல்லையை விட்டு அனுப்பும் விழா

கெலமங்கலத்தில் பட்டாளம்மனை எல்லையை விட்டு அனுப்பும் விழா

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில் உள்ள கிராம தேவதை பட்டாளம்மன் கோவில் தேர்த்திருவிழா மற்றும் பல்லக்கு உற்சவ விழா வரும், 13 ல் துவங்கி, 15 வரை நடக்கிறது. இதையொட்டி, தீய சக்திகள் கெலமங்கலம் நகருக்குள் வராமல் இருக்க, கிராம தேவதை பட்டாளம்மனை எல்லையை விட்டு அனுப்புதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கெலமங்கலம் நகரில், 5 இடங்களில் சக்தியம்மா உருவ பொம்மையை வைத்து பக்தர்கள் பூஜை செய்தனர்.மேலும், தங்களது வீடுகளில் செய்த தயிர் சாதத்தை எடுத்து வந்து, 5 இடங்களிலும் படையலிட்டனர். தொடர்ந்து, பட்டாளம்மன் கோவிலில் இருந்து, 5 இடங்களுக்கும் உற்சவ மூர்த்தி எழுந்தருளினார். பட்டாளம்மனுக்கு, 5 கிடா வெட்டி பக்தர்கள் தயிர் சாதத்தை வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி