உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மருந்து கொள்முதல் குறித்து விசாரணை

மருந்து கொள்முதல் குறித்து விசாரணை

மதுரை : மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு தமிழ்நாடு மருத்துவ கழகம் மூலம் மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. அவசர, அவசிய காரணங்களுக்காக அவ்வப்போது ஆஸ்பத்திரி நிர்வாகமே மருந்துகளை கொள்முதல் செய்யவும் வசதி உள்ளது. இதற்கென அரசே ரூ. 25 லட்சம் வரை நிதி ஒதுக்கியுள்ளது. இதில் ஒரு நாளில் ரூ. 25 ஆயிரம் வரை மருந்து, மாத்திரையை வாங்கிக் கொள்ளலாம். இதன்படியும் மருந்து, மாத்திரை வாங்க டெண்டர் விட்டே செயல்படுத்த வேண்டும். அவ்வகையில் கடந்த ஆண்டு மருந்து, மாத்திரை வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக சென்னை மருத்துவ கல்லூரி இயக்குனரகத்திற்கு 'மொட்டை மனு' அனுப்பப்பட்டுள்ளது. இதனடிப்படையில் விசாரணை நடத்த சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் கனகசபைக்கு உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து நேற்று அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரி அலுவலர்களிடம் விசாரணை நடத்தியுள்ளார். விசாரணைக்குப் பின் அறிக்கையை மருத்துவ கல்வி இயக்குனரகத்திடம் தாக்கல் செய்வார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ