உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / யானைமலை அடிவாரத்தில் வேலி அமைக்க வழக்கு

யானைமலை அடிவாரத்தில் வேலி அமைக்க வழக்கு

மதுரை: மதுரை ஒத்தக்கடை அப்துல் ரகுமான் ஜலால். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:ஒத்தக்கடை யானைமலை அடிவாரத்தில் நரசிங்கப் பெருமாள் கோயில் உள்ளது. அருகிலுள்ள பாறையில் கல்குவாரி நடத்த சில ஆண்டுகளுக்கு முன் அரசு அனுமதித்திருந்தது. வெடி வைத்து அதிக ஆழத்தில் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டன.தற்போது குவாரி செயல்படவில்லை. அப்பள்ளத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. 2023 ல் கோயிலுக்கு வந்த திண்டுக்கல்லை சேர்ந்த 2 பெண்கள் மூழ்கி இறந்தனர். பள்ளத்தை சுற்றிலும் வேலி அமைத்து, எச்சரிக்கை பலகை நிறுவ உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு கலெக்டர், கனிமவளத்துறை துணை இயக்குனர், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு செப்.,10க்கு ஒத்திவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை