உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோயில் குளத்தை மீட்க வழக்கு

கோயில் குளத்தை மீட்க வழக்கு

மதுரை: திருநெல்வேலி முன்னீர்பள்ளம் சுந்தரவேல். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் அக்னீஸ்வரர் கோயில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதற்கு சொந்தமான அக்னி தீர்த்த குளம் 1970 ல் மூடப்பட்டது. அதில் பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் புனித நீராட முடியவில்லை. குளத்தை மூடி பஸ் ஸ்டாண்ட் அமைத்தது சட்டவிரோதம். அரசு புறம்போக்கு நிலத்தில் அமைத்திருக்கலாம். குளத்தை மீட்கக்கோரி அறநிலையத்துறை கமிஷனர், கோயில் செயல் அலுவலர், பூதலுார் தாசில்தாருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: குளம் தொடர்பான வருவாய்த்துறையின் ஆவணங்களை ஆக.,27ல் அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ