உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பொதுமக்களை அச்சுறுத்தும் மரம்

பொதுமக்களை அச்சுறுத்தும் மரம்

வாடிப்பட்டி : வாடிப்பட்டியில் ரோட்டில் சாய்ந்து விழும் நிலையில் உள்ள மரத்தால் விபத்து அபாயம் உள்ளது. வாடிப்பட்டியில் திண்டுக்கல் - - - மதுரை ரோட்டில் ஓரம் மற்றும் ஓடைப் பகுதியில் குப்பையை கொட்டி எரிக்கின்றனர். இரவு நேரங்களில் வாகனங்களில் ரசாயனம், பிளாஸ்டிக், கழிவு மூடைகள், பழுதான உபயோகமற்ற படுக்கை, தலையணை உட்பட பொருட்களை வீசிச் செல்கின்றனர். இதில் தீ வைத்து எரிப்பதால் இரவு, பகல் எந்நேரமும் துர்நாற்றத்துடன் புகைமண்டலமாக மாறுகிறது. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மரத்தின் துார் அருகே தீ வைப்பதால் அடிப்பகுதி, புகையால் இலைகளும் கருகி உதிர்ந்து விடுகின்றன. இலைகள் உதிர்ந்து, காய்ந்த கிளைகளுடன் உள்ள பட்டுப்போன மரமும் எப்போது விழுமோ என்ற பரிதாப நிலையில் உள்ளது. இச்செயலை தடுக்க வேண்டிய பேரூராட்சி நிர்வாகம், தாதம்பட்டி மயான பகுதி ரோட்டில் குப்பையை எரிக்கிறது. அபாய மரத்தை அகற்ற நெடுஞ்சாலை துறையாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை