உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் பாலத்திற்கு தோண்டிய பள்ளத்தில் கவிழ்ந்த ஆட்டோ

மதுரையில் பாலத்திற்கு தோண்டிய பள்ளத்தில் கவிழ்ந்த ஆட்டோ

மதுரை : மதுரை செல்லுார் பகுதியில் பாலம் வேலைக்காக தோண்டிய பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கியது.மதுரையில் நேற்று மாலை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடி மின்னலுடன் மழை பெய்ததால் பல இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. கோரிப்பாளையம் -செல்லுார் செல்லும் ரோட்டில் பால வேலைகள் நடைபெற்று வருகிறது. பாலத்திற்கான துாண் அமைப்பதற்காக ஆறு அடிக்கும் அதிகமாக பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. இந்தப் பள்ளத்தில் மழை நீர் தேங்கி இருந்தது.தெற்கு வாசலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் ஆனையூரில் உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக ஷேர் ஆட்டோவில் சென்றனர். ஆட்டோ பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து அனைவரையும் மீட்டனர். காயமடைந்த ஆட்டோ டிரைவர் ஓடிவிட்டார். விபத்து குறித்து செல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை