உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வாழை இலைக்கு விலையில்லையே வாழ்வாதாரம் பெரும் தொல்லையே

வாழை இலைக்கு விலையில்லையே வாழ்வாதாரம் பெரும் தொல்லையே

திருப்பரங்குன்றம் : சில நாட்களாக வாழை இலைகள் விற்பனை ஆகாததால் திருப்பரங்குன்றம் வாழை விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.விவசாயி சிவராமன் கூறியதாவது: திருப்பரங்குன்றம் விவசாயிகள் ஆயிரத்துக்கும் மேலான ஏக்கரில் வாழை நடவு செய்துள்ளோம். வாழை இலைக் கட்டு முகூர்த்த நாட்களில் கட்டுக்கு ரூ.ஆயிரம் வரையும், சாதாரண நாட்களில் கட்டு ரூ. 400 - ரூ. 500 வரையும் விற்பனையாகும்.தொடர்ந்து வாழை இலை கட்டுகளை மார்க்கெட்டிற்கு அனுப்புகிறோம். சில நாட்களாக வாழை இலைகள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கிறது. நாட்களாகிவிட்டால் இலைகள் அழுகிவிடும். வியாபாரிகள் அவற்றை குப்பையிலோ, மாடுகளுக்கோ போட்டு விடுவர். இதனால் நஷ்டம் அடைகிறோம்.விலை இல்லாததால் ஏராளமான விவசாயிகள் இலைகளை அறுக்காமல் உள்ளனர். காற்று அதிகமாக வீசியதால் இலைகள் கிழிந்து பயனற்று போகிறது. ஏக்கருக்கு ரூ. 1.50 லட்சம் செலவு செய்துள்ளோம். வருமானம் வரும் சூழலில் இலைகள் விற்பனையாகாதது வேதனை அளிக்கிறது.நெல், கரும்புக்கு அரசு விலை நிர்ணயித்துள்ளது போல், காய்கறிகள், வாழைத் தார்கள், இலைகளுக்கும் நிரந்தர விலை நிர்ணயிக்க வேண்டும். உணவுப் பொருள்களை பயன்படுத்தும் கடைகளில் வாழை இலை பயன்பாட்டை கட்டாயப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் வாழை விவசாயிகள் வாழ்வாதாரம் முன்னேறும் என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை