உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வழக்கறிஞர் சங்க தேர்தல்

வழக்கறிஞர் சங்க தேர்தல்

திருமங்கலம்: திருமங்கலம் வழக்கறிஞர் சங்கத் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்தது. மதுரை பார் அசோசியேஷன் வழக்கறிஞர் விஜயன் தேர்தல் நடத்தும் அலுவலராகவும், தமிழ்நாடு பார் கவுன்சில் இணைத்தலைவர் அசோக் தேர்தல் பார்வையாளராகவும் இருந்தனர்.முன்னாள் தலைவர் ராமசாமி மீண்டும் தலைவராகவும், முன்னாள் செயலாளர் அறிவொளி மீண்டும் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். பொருளாளர் தினேஷ் பாபு, துணைத் தலைவர் கண்ணன், இணைச் செயலாளர் விஜய், நிர்வாக குழு உறுப்பினர்களாக கனகராஜ், பழனிவேல், பாரதி, காளீஸ்வரி, முகமது அசாருதீன், ரமேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !