மேலும் செய்திகள்
5 தொகுதிகள் கேட்டுள்ளோம் ஏ.சி.சண்முகம் பேட்டி
4 hour(s) ago
மதுரை- சினிமா- 02.03
4 hour(s) ago
டூவீலர் மீது வேன் மோதல் இருவர் பலி, ஒருவர் காயம்
5 hour(s) ago
மதுரை : ''நாம் தமிழர் கட்சியின் 'பி டீம்' தான் பா.ஜ.,'' என மதுரை தொகுதி வேட்பாளர் சத்யாதேவியை ஆதரித்து நடந்த பிரசார கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.மதுரை கே.புதுாரில் அவர் பேசியதாவது: நாங்கள் விவசாயி சின்னத்தில் ஆறு தேர்தல்களை எதிர்கொண்டு 7 சதவீத ஓட்டுக்கள் பெற்றோம்.சிறுபான்மை மக்களின் ஓட்டுகள் எனக்கு வந்துவிடக் கூடாது என்று தி.மு.க., மக்களிடம் சென்று நான் பா.ஜ., வின் 'பி டீம்' என பொய் பிரசாரம் செய்தது. அதை மக்கள் நம்பினர்.கமல் நான்தான் மாற்றுவேன் என்று குறுக்கே ஓடினார். தினகரன் குக்கரிலே எங்களை வேக வைத்தார். இப்போது எங்கள் சின்னத்தை பறித்துள்ளனர். அதற்கு காரணம் பயம். அந்த பயம் உங்களுக்கு கடைசி வரை இருக்க வேண்டும்.மோடி திடீரென்று தமிழ் மீது பற்று கொண்டு பேசி வருகிறார். இன்னும் 10 நாளில் தேர்தல் வருவதால் கச்சத்தீவு பிரச்னையை கையில் எடுத்துள்ளனர். அது தாரை வார்க்கப்பட்ட நாளில் இருந்து நான் அதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். எனவே என்னுடைய 'பி டீம்' தான் பா.ஜ., என்றார்.
4 hour(s) ago
4 hour(s) ago
5 hour(s) ago