உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆடிப்பெருக்கில் ரூ.8.72 கோடிக்கு பத்திரப்பதிவு

ஆடிப்பெருக்கில் ரூ.8.72 கோடிக்கு பத்திரப்பதிவு

மதுரை: அசையாச்சொத்துக்கள் குறித்த பத்திரப்பதிவுகளை சுபமுகூர்த்த நாட்களில் மேற்கொள்ள மக்கள் விரும்புகின்றனர். நேற்று ஆடிப்பெருக்கையொட்டி விடுமுறை நாளான சனிக்கிழமையிலும் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களும் வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் பத்திரப்பதிவு மேற்கொள்ள கூடுதல் கட்டணத்தை சேர்த்து வசூலிக்க சார் பதிவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.மதுரை மாவட்டத்தில் 52 சார் பதிவாளர் அலுவலங்களில் பத்திரப்பதிவு நடந்தது. சொத்துக்கள் பரிவர்த்தனை தொடர்பாக ஒரே நாளில் 1465 பத்திரங்கள் பதிவாகின. இதன் மூலம் ரூ.8.72 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது வழக்கத்தைவிட அதிகம். 2024 ஏப்.,1 முதல் நேற்று வரை 99 ஆயிரத்து 732 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூ.367.35 கோடி வருவாய் கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ