உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அப்ரூவல் வழங்க விண்ணப்பத்தாரரிடம் டீலிங் குறைதீர் மனுக்கள் இழுத்தடிப்புக்கு கமிஷனர் செக்

அப்ரூவல் வழங்க விண்ணப்பத்தாரரிடம் டீலிங் குறைதீர் மனுக்கள் இழுத்தடிப்புக்கு கமிஷனர் செக்

மதுரை: மதுரை மாநகராட்சி மண்டல குறைதீர்க் கூட்டங்களில் பெறப்படும் மனுக்கள் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்ற கமிஷனர் தினேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் மாதம் ஒரு குறைதீர்க் கூட்டம் நடக்கிறது. 100க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிக்கப்படுகின்றன. இதன் மீதான நடவடிக்கை குறித்து அடுத்த கூட்டத்திற்குள் மண்டல, வார்டுகளின் அலுவலர்கள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் சில மண்டலங்கள் கண்டுகொள்வதில்லை.மேலும் 'மண்டல அலுவலகத்தில் இருந்து பேசுகிறோம்...' என மனுதாரர்களிடம் சிலர் 'டீலிங்'கில் ஈடுபடுகின்றனர். தர மறுக்கும்பட்சத்தில் பிளான் அப்ரூவல், பெயர் மாற்றம் உள்ளிட்ட மனுக்கள் கிடப்பில் போடப்படுவதாக புகார் எழுந்தது. இதற்கு கமிஷனர் 'செக்' வைத்துள்ளார்.மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: இப்பிரச்னைகள் குறித்து அறிந்த கமிஷனர் மனுக்களை உடன் மாநகராட்சி ஆன்லைனில் பதிவேற்றவும், குறிப்பிட்ட நாட்களுக்குள் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை பதிவு செய்யவும் உத்தர விட்டுள்ளார்.மேலும் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்கும் போது, முந்தைய கூட்டத்தில் மனு அளித்தவர்களை அலைபேசியில் கமிஷனரே அழைத்து, 'உங்கள் கோரிக்கை சரிசெய்யப்பட்டதா, நடவடிக்கை எந்த நிலையில் உள்ளது' என விசாரிப்பதால் 'டீலிங்'கிற்கு 'செக்' வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ