உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மதுரை : தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. காலமுறை ஊதியம் வழங்க பொது சுகாதார இயக்குனர் அரசுக்கு கருத்துரு கோப்பு அனுப்பியும் பத்தாண்டுகளாக வழங்காததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் மாநிலம் முழுவதும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரையில் மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார் தலைமை வகித்தார். செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் நாகலட்சுமி, துணைத் தலைவர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடுவருவாய்த்துறை பதவி உயர்வு அலுவலர்கள் சங்கமாநில பொதுச் செயலாளர் ஜெயகணேஷ், ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட தலைவர் காளிதாஸ், பொதுச்செயலாளர் சேது உள்பட பலர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ