உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கதாநாயகனாக வரவேற்பு உள்ளதால் அப்பாதையிலேயே செல்ல விருப்பம் மதுரையில் நடிகர் சூரி பேட்டி

கதாநாயகனாக வரவேற்பு உள்ளதால் அப்பாதையிலேயே செல்ல விருப்பம் மதுரையில் நடிகர் சூரி பேட்டி

மதுரை, : கதாநாயகனாக நல்ல வரவேற்பு உள்ளதால் அந்த பாதையிலேயே செல்ல விரும்புவதாக மதுரையில் ரசிகர்களுடன் இணைந்து கருடன் திரைப்படத்தை பார்த்த நடிகர் சூரி தெரிவித்தார்.நடிகர்கள் சசிக்குமார், உன்னிமுகுந்தன், சூரி நடித்து சமீபத்தில் வெளியான கருடன் திரைப்படம் வரவேற்பை பெற்றுள்ளது. மதுரை தியேட்டரில் இந்த படத்தை ரசிகர்களுடன் இணைந்து பார்த்த சூரி கூறியதாவது:நல்ல படத்தை மக்கள் கொண்டாடுவார்கள். பெண்கள், குழந்தைகள் மத்தியில் கருடன் படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து நல்ல சினிமாவை மக்களுக்கு கொடுத்துக்கொண்டே இருப்பேன். எப்போதும் கதாநாயகனாக இருக்கவே ஆசைப்படுகிறேன். காமெடி ரோலில் நடிக்க இதுவரை யாரும் அழைக்கவில்லை. அப்படி வாய்ப்பு கிடைத்தால் நடிக்கத் தயாராக உள்ளேன். 'விடுதலை பாகம் -2' விரைவில் வெளியாகும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ