உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அ.தி.மு.க., வேட்பாளர் சரவணனை ஆதரித்து கார்த்திக் பிரசாரம்

அ.தி.மு.க., வேட்பாளர் சரவணனை ஆதரித்து கார்த்திக் பிரசாரம்

மதுரை: மதுரை அ.தி.மு.க., வேட்பாளர் சரவணனை ஆதரித்து கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., தலைமையில் நடிகர் கார்த்திக் பிரசாரம் செய்தார்.அவர் பேசியதாவது: அரசியலில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் சுயநலமின்றி பொது நலனுடன் செயல்பட வேண்டும். அரசியல்வாதிகளை நம்பி ஓட்டளிக்கும் மக்களை எப்படி ஏமாற்ற மனம் வருகிறது என தெரியவில்லை. ஆட்சியாளர்களுக்கு பதவி ஆசை இருந்தால் மட்டும் போதாது. நல்ல திறமையும் வேண்டும். அரசியலுக்கு இளைஞர்கள் புதியவர்கள் திறமையானவர்கள் வரவேண்டும். வாக்காளர்களின் ஒரு விரலால் இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றி அமைக்க முடியும்.நம் நாடு திராவிட நாடு. இந்தியாவில் தான் உள்ளது. நான் பிரித்துப் பேச விரும்பவில்லை. நீங்கள் எங்களைப் பிரிக்க நினைக்கிறீர்கள். வேண்டாம்... நாங்கள் ஒன்று சேர்ந்தால் நீங்கள் தாங்க மாட்டீர்கள். இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை