உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாவட்ட கபடி போட்டியில் கே.ஆர்.எஸ்., பள்ளி சாதனை

மாவட்ட கபடி போட்டியில் கே.ஆர்.எஸ்., பள்ளி சாதனை

மதுரை : மதுரை கே.எம்.ஆர்., பள்ளியில் மதுரை சகோதயா ஸ்கூல் காம்ப்ளக்ஸ் சார்பில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது.இதில் மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் (கே.ஆர்.எஸ்.) சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இரண்டாம் இடம் பெற்றனர்.முதல் போட்டியில் அனுப்பானடி வேலம்மாள் வித்யாலயா பள்ளியை 24 - 16 என்ற புள்ளிகளில் கே.ஆர்.எஸ். பள்ளி வென்றது. 2வது போட்டியில் கே.எம்.ஆர்., பள்ளியை 33 - 29 புள்ளிகளில் கே.ஆர்.எஸ். பள்ளி வீழ்த்தியது. இறுதிப் போட்டியில் விரகனுார் வேலம்மாள் வித்யாலாயா பள்ளி 31 - 11 என்ற புள்ளிகளில் கே.ஆர்.எஸ். பள்ளியை வென்றது.இரண்டாமிடம் பெற்ற மாணவர்கள் ராமகிருஷ்ணன், அப்துல் காசிம், பிரவீன், சாந்தனு, ஹேமந்த்குமார், பெண்ணாச்சி சபரி, சந்தோஷ், சரவணன், சூர்ய நாராயணன், மனோஜ், ஸ்ரீநாத், ஜனகருப்பசாமியை முதல்வர் சூர்யபிரபா, உடற்கல்வி இயக்குநர் தசரதி வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை