| ADDED : ஆக 11, 2024 04:46 AM
திருப்பரங்குன்றம; திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க., கிழக்கு மாவட்டம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கட்சி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது. இளைஞரணி செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா கூறியதாவது: அமைச்சர் உதயநிதி துணை முதல்வராகிறார் என அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறிவிட்டு பின்பு மறுத்துள்ளார். முதல்வரின் கட்டுப்பாட்டில் அமைச்சர்கள் இல்லை. சென்னையில் கார் பந்தயம் அவசியமா என அ.தி.மு.க., உள்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் கேள்வி எழுப்புகின்றனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் நடத்தப்படுகிறது. அதை மக்கள் ஏற்க மாட்டார்கள். கார் பந்தயம் நிச்சயமாக நடக்காது. அதற்காகத்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம்.கடன் பிரச்னையில் அ.தி.மு.க., வை கேலி செய்த தி.மு.க., அரசு பல மடங்கு கடன் வாங்கி உள்ளது. மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தை ஓரவஞ்சகமாகத்தான் பார்க்கிறார்கள். தி.மு.க., எம்.பி.,க்கள் இதுகுறித்து லோக்சபாவில் போராட்டங்களில் ஈடுபடவில்லை. வக்பு வாரிய சட்டத்திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என்றார்.