உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தவறிய நகை ஒப்படைப்பு

தவறிய நகை ஒப்படைப்பு

சோழவந்தான் : சோழவந்தான் ரயில்வே பீடர் ரோட்டில் டீ கடை நடத்துபவர் சரவணன். நகர தி.மு.க., நிர்வாகி. நேற்று முன்தினம் இவரது கடை அருகே ரோட்டில் கிடந்த தங்கச் செயின், மோதிரத்தை கண்டெடுத்தார். அப்பகுதியில் அடகு கடை மற்றும் ஐ.ஓ.பி.,வங்கியில் விசாரித்ததில் முதலியார் கோட்டையைச் சேர்ந்த வசந்தி என்பவர் திருப்பிச் சென்ற அடகு நகை எனத் தெரிந்தது. வங்கி மேலாளர் ராஜசங்கர், இன்ஸ்பெக்டர் செல்ல பாண்டியன் முன்னிலையில் 4.5 பவுன் நகைகளை சரவணன், உரிமையாளர் வசந்தியிடம் வழங்கினார். வங்கி மேலாளர், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் பொதுமக்கள், போலீசார் சரவணனின் நேர்மையை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை