உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை - பெங்களூருக்கு புதிய வந்தே பாரத் ரயில் வந்தே தீரணும் : நேரம், கட்டணம் கூடுதல் என்றாலும் பயணிகள் ஆர்வம்

மதுரை - பெங்களூருக்கு புதிய வந்தே பாரத் ரயில் வந்தே தீரணும் : நேரம், கட்டணம் கூடுதல் என்றாலும் பயணிகள் ஆர்வம்

மதுரை: 'ஜூன் 20ல் சென்னையில் பிரதமர் மோடி துவக்கி வைப்பதாக இருந்து ஒத்தி வைக்கப்பட்ட மதுரை - பெங்களூருபுதிய வந்தே பாரத் ரயில் எப்போது வருமோ எனமதுரை பயணிகள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.மதுரையில் இருந்து பெங்களூருவுக்கு தினமும் பல ஆயிரம் பேர் பயணிக்கின்றனர். துாத்துக்குடியில் இருந்து மைசூருக்கு அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது.பெரும்பாலும் பலர் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர்.அதனால் துாத்துக்குடி - மைசூர் ரயிலுக்கான பட்டியலில் தினமும் 400 பயணிகளுக்கு மேல் காத்திருப்போர் உள்ளனர். கடைசி நிமிடம் வரை சீட் உறுதி செய்யப்படாத போது அவர்கள் பயணத்தையே ரத்து செய்து விடுகின்றனர். இதனால் மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலை இயக்கினால் தமிழக, கர்நாடக ஊழியர்கள், வியாபாரிகள், தொழில் முனைவோர் அதிக பலன் அடைவர்.இந்தியாவில் 51க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்ககப்படுகின்றன. 2024ம் ஆண்டுக்குள் 71 வந்தே பாரத் ரயில்கள் இயக்கவேண்டும் என ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.இதையடுத்து மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே வாரியம் அறிவித்தது.இந்த ரயில் திருச்சி சுற்றிச் செல்வதால் பயண நேரம் அதிகமானாலும் பயணிகள் பெரிதும் வரவேற்றனர். இதுதவிர இந்த ரயில் முக்கிய தொழில் நகரான ஓசூரில் நின்று செல்லாது என்ற தகவலும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது..இது குறித்து தெற்கு ரயில்வே பயணிகள் நலச்சங்க பொதுச்செயலாளர் பத்மநாதன் கூறியதாவது:ஏப். 20ல் மதுரை -பெங்களூரு வந்தே பாரத் ரயில் இயங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மதுரையில் இருந்து திருச்சி வழியாக செல்ல கூடுதலாக 2 மணி நேரம் ஆகும், அதிக கட்டணம் என்றாலும் இந்த ரயிலை அதிகம் எதிர்பார்த்தோம்.இந்நிலையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை வாரத்தில் 3 நாட்கள் திண்டுக்கல், கரூர், நாமக்கல் வழியாகவும், அடுத்த 3 நாட்கள் திண்டுக்கல், திருச்சி, கரூர் வழியாகவும் இயக்கவும், ஓசூரில் நின்று செல்லவும் பரிந்துரை செய்துள்ளோம். விரைவில் இது குறித்து தகவல் வரும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலை இயக்கினால் தமிழக, கர்நாடக ஊழியர்கள் வியாபாரிகள், தொழில்முனைவோர் அதிகபலன் அடைவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

vijayakumar Kumar
ஆக 10, 2024 03:16

திண்டுக்கல் கரூர் நாமக்கல் சேலம் வழியாக இயக்க வேண்டும்


Paul Velayutham
ஆக 07, 2024 09:40

கரூர் சேலம் வழியாக சென்றால் நேரமும் பணமும் மிச்சம்.திருச்சி வழியாக சென்றால் நேரமும் பணமும் கூடுதல்


முக்கிய வீடியோ