உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புரவி எடுப்பு திருவிழா

புரவி எடுப்பு திருவிழா

திருமங்கலம் : திருமங்கலம் நடுவக்கோட்டை கிராமத்தில் அய்யனார் காவிரி கருப்பசாமி கோயில் உள்ளது. கோவிலுக்குள் அய்யனார் சுவாமியும், வெளியே காவல் தெய்வமான காவேரி கருப்பசாமியும் உள்ளனர்.ஊர்க்காவல் தெய்வமான காவேரி கருப்பசாமி குதிரை வாகனத்தில் இரவு நேரங்களில் வலம் வந்து காவல் காப்பதாக ஐதீகம். இதையொட்டி ஆண்டுதோறும் ஆடி முதல் தேதி புரவி எடுப்புத் திருவிழா இக்கோவிலில் நடைபெறும். இதில் பக்தர்கள் நினைத்த காரியம் நிறைவேற புரவி எடுத்து வருவதாக நேர்த்தி கடன் செய்வர். காரியம் கைகூடியதும் புரவி எடுக்க கோவில் நிர்வாகத்தில் பெயர்களை பதிவு செய்வர்.பின்னர் ஆடித்திருவிழாவுக்கு ஒரு வாரம் முன்பு குறிப்பிட்ட தொகையை கோவில் நிர்வாகத்திடம் கொடுத்து புரவி செய்ய ஏற்பாடுகளை செய்வர். இப்பணி முடிந்ததும் ஆடி முதல் நாள் புரவி எடுப்பு நடைபெறும்.இந்தாண்டு நேற்று நடந்த புரவி எடுப்பு திருவிழாவில் 9 பேர் புரவி எடுத்து வந்தனர். ஊர் மந்தையில் இருந்து புரவிக்கு கண் திறந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று காவேரி கருப்பசாமி கோயில் சன்னதியில் இறக்கி வைத்து வழிபட்டனர். இதன்பின் ஆடுகளை பலியிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கிழவனேரி, பொன்னம்பட்டி, மீனாட்சிபுரம், சவுடார்பட்டி, அச்சம்பட்டி, திரளி கிராம பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி