உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஊதியம், அகவிலைப்படி உயர்வுத் தொகை நிலுவையை தணிக்கையில் சேர்க்க வேண்டும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

ஊதியம், அகவிலைப்படி உயர்வுத் தொகை நிலுவையை தணிக்கையில் சேர்க்க வேண்டும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

மதுரை : ''ஐந்தாவது ஊதியக்குழு ஊதிய உயர்வு மற்றும் 1999 முதல் 2003 வரை பல்வேறு கட்டத்தில் உயர்த்திய அகவிலைப்படி நிலுவைத் தொகையையும் சேர்த்து திருத்திய கணக்குத்தாள் வழங்காவிடில் போராட்டம் நடத்துவோம்'' என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.அவர் கூறியிருப்பதாவது: மதுரை மாநகராட்சி ஆசிரியர்கள், பணியாளர்களின் பி.எப்., தொகையாக ரூ.20 கோடியே 5 லட்சத்து 52 ஆயிரத்து 815 ஐ மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு 1.4.1990 முதல் 31.3.2019 முடிய 29 ஆண்டுக்கு உள்ளாட்சி தணிக்கை முடித்து 3 தவணைகளாக கடந்த பிப்ரவரிக்கு முன்பு செலுத்தப்பட்டுள்ளது.இத்தொகையை செலுத்தும் முன் ஆசிரியர், பணியாளர்களிடம், தணிக்கைக்கு பின் வழங்கும் கணக்குத் தாளில் சந்தேகம் இருந்தால் அதை நிவர்த்தி செய்ய கோரமாட்டேன் என கடிதம் பெற்ற பின்பே மாநகராட்சி கணக்குத்தாளை வழங்கியுள்ளது. இந் நிலையில் 6 பேர் அவ்விதமான கடிதம் தரவில்லை.ஏப்.1990 முதல் மார்ச் 2019 முடிய 29 ஆண்டுக்கு உள்ளாட்சி தணிக்கை செய்ததில் 1990 முதல் ஐந்தாவது ஊதியக்குழு அமல்படுத்தியதால் ஏற்பட்ட நிலுவைத் தொகை பி.எப்., நிதியில் சேர்த்தனர். இந்நிலையிலும் ஐந்தாவது ஊதியக்குழு ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகைகளை உள்ளாட்சித் தணிக்கையில் சேர்க்காமல் தணிக்கை செய்துள்ளனர்.அதனால் அப்போது பணியாற்றிய ஒவ்வொரு ஆசிரியருக்கும் ரூ.30 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே விடுபட்ட இரு நிலுவை தொகையையும் சேர்த்து கணக்கீடு செய்து திருத்திய கணக்குத்தாளை, ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு வழங்க வேண்டும். அதனடிப்படையில் அரசு விதிகளுக்கு உட்பட்டு வட்டி கணக்கீடு செய்து மாநில கணக்காயர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.இதுகுறித்து மாநகராட்சிக்கு மனு அளித்து 70 நாட்களுக்கு மேலாகியும் நடவடிக்கை இல்லை. எனவே தேர்தல் விதிமுறை முடிவுக்கு வந்தபின் மதுரை மாவட்ட இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்புடன் இணைந்து போராட்ட நடவடிக்கையில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை