உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒரு நுாலகம் அமைத்தால் நுாறு சிறைச்சாலைகளை மூடலாம் முதன்மை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி பேச்சு

ஒரு நுாலகம் அமைத்தால் நுாறு சிறைச்சாலைகளை மூடலாம் முதன்மை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி பேச்சு

மதுரை : 'ஒரு நுாலகம் அமைத்தால் நுாறு சிறைச்சாலைகளை மூடலாம்' என மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலக முதலாம் ஆண்டு விழாவில் முதன்மைத் தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி பேசினார்.கடந்த 2023 ஜூலை 15ல் மதுரையில் 3 ஏக்கர் பரப்பளவில் கலைஞர் நுாலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் ஓராண்டு நிறைவு விழா நேற்று கொண்டாடப்பட்டது. பொது நுாலக இணை இயக்குநர் இளங்கோ சந்திரகுமார் தலைமை வகித்தார். முதன்மை நுாலகர் தினேஷ் குமார் வரவேற்றார். மாவட்ட நுாலக அலுவலர் பாலசரஸ்வதி பங்கேற்றார். இளங்கோ சந்திரகுமார்:நுாலகத்திற்கு 3 லட்சத்து 62 ஆயிரம் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. நுாலகத்தை திறந்து புத்தகங்களை வாங்கி வைத்தால் மட்டும் போதாது. அவை வாசகர்களை சென்றடைய வேண்டும். இங்கு வரலாற்று சாதனையாக 9 லட்சத்து 51 ஆயிரத்து 474 வாசகர்கள் ஓராண்டில் இந்நுாலகத்தை பயன்படுத்தியுள்ளனர். வாசிப்பை நேசிக்க வேண்டும். வாசிப்பு பழக்கம் குழந்தை பருவத்தில் இருந்தே தொடங்க வேண்டும்.சத்தியமூர்த்தி: ஒரு நுாலகம் அமைத்தால் நுாறு சிறைச்சாலைகளை மூடலாம். அவ்வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் உலகத்தரம் வாய்ந்த ஒரு நுாலகம் மதுரையில் அமைக்கப்பட்டுள்ளது. துபாயில் உள்ள புகழ் பெற்ற நுாலகத்தில் ஒரு நாளில் அதிகபட்சம் 200 பேர் தான் வருகின்றனர். ஆனால் இங்கு 2500 பேர் தினமும் வருகின்றனர். நுாலகர் சந்தான கிருஷ்ணன் நன்றி கூறினார். பேராசிரியர் பிரபாகரன், மாவட்ட தலைமை பொறியாளர் செல்வராஜன், நுாலகர் ஜெபஜோஸ்லின் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Valayapatti Kanniappan Kanniappan
ஜூலை 15, 2024 18:23

நூலகம் சென்று வாசிப்பவர்கள் எத்தனை பேர் டாஸ்மாக்கில் மதுபானம் குடிப்பதில்லை அல்லது குடிப்பழக்கம் உள்ளவர்கள் குடிப்பதை நிறுத்தி விட்டார்கள் என்று கணக்கெடுங்கள் மதுபானம் குடிப்பதற்கு யாருமில்லை டாஸ்மாக் மூடிவிட்டார்கள் என்றால்தான் குற்றங்கள் குறையும், நம் தமிழ்நாடும் உருப்படும்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை