உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை மாநகராட்சியில் இணைய கிராம சபை கூட்டத்தில் எதிர்ப்பு

மதுரை மாநகராட்சியில் இணைய கிராம சபை கூட்டத்தில் எதிர்ப்பு

திருநகர்: மதுரை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு விளாச்சேரி, தனக்கன்குளம், தோப்பூர் ஊராட்சி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.விளாச்சேரியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் முருகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் முத்து லட்சுமி முன்னிலை வகித்தார். உறுப்பினர்கள் பாண்டியன், கலைச்செல்வி, பஞ்சவர்ணம், பாலா, ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் மகபூபீவி கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் ராஜா அறிக்கை வாசித்தார்.விளாச்சேரி ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பதாக தகவல்கள் வருகிறது ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது. இணைப்பதால் எந்த நன்மையும் கிடைக்காது. எனவே மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என தனி தீர்மானம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பினர். கோரிக்கையை ஏற்று தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.விளாச்சேரி கண்மாய் மடைகளை சீரமைக்க 3 ஆண்டுகளாக கோரிக்கை வைத்துள்ளோம். எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த நிலை தொடர்ந்தால் விவசாயம் முழுவதும் முடங்கிவிடும் என்றனர்.தோப்பூர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், கப்பலுார் டோல்கேட்டில், அருகில் குடியிருப்போரின் வாகனங்களுக்கும் கட்டாய வசூல் செய்கின்றனர். டோல்கேட்டை கள்ளிக்குடி அருகே இடமாற்றம் செய்ய வேண்டும், தோப்பூரை மதுரை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என்றும் கோரிக்கை வைத்தனர். தனக்கன்குளத்தில் நடந்த கிராம சபை கூட்டத்திலும் மாநகராட்சியுடன் இணைய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை