உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விசாரணை கைதி மதுரையில் மரணம் போலீஸ் மீது உறவினர்கள் புகார்

விசாரணை கைதி மதுரையில் மரணம் போலீஸ் மீது உறவினர்கள் புகார்

மதுரை : மதுரையில் விசாரணையின் போது போலீசார் தாக்கியதில் கார்த்திக் 32, என்பவர் இறந்ததாக கூறி அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.மதுரை யாகப்பா நகர் 'இட்லி' கார்த்திக். வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. ஏப்.,3ல் வழிப்பறி வழக்கில் இவரை மதிச்சியம் போலீசார் கைது செய்து சிறைக்கு அழைத்து வந்தனர்.அவரது உடல்நிலை சரியில்லாததால் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அதிகாலை இறந்தார். இவருக்கு மனைவி, இரு மகள்கள் உள்ளனர்.'போலீஸ் விசாரணையின்போது கார்த்திக் தாக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாகவே அவர் இறந்தததாக' தந்தை கணேசன் குற்றம்சாட்டினார்.நேற்று காலை போலீசை கண்டித்து உறவினர்கள் அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் சமரசம் செய்தனர். நேற்று மதியம் பிரேத அறைக்கு வந்து மதுரை ஜே.எம். 2 மாஜிஸ்திரேட் கல்யாண் மாரிமுத்து விசாரணை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை