தேர்தல் விழிப்புணர்வு
மதுரை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆடை வடிவமைப்பு மற்றும் கல்வித் துறை சார்பில் 'வாக்களிப்பது நம் கடமை' என்ற தலைப்பில் மெஹந்தி போட்டி நடந்தது. துவக்கி வைத்த முதல்வர் கவிதா வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். வணிகவியல் துறை சுமையா பானு-மாளவிகா முதல் பரிசையும், மஞ்சுளா-கவுசல்யா 2ம் பரிசையும், வரலாற்றுத் துறை அழகு மீனாட்சி-கங்கை ஈஸ்வரி 3ம் பரிசையும் பெற்றனர். மரக்கன்றுகள் வழங்கல்
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி தாவரவியல் துறை, சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் சார்பில் உலக வன தினம், தண்ணீர் தினத்தை முன்னிட்டு கருத்தரங்கு நடந்தது. துணை முதல்வர் முத்துக்குமரன் தலைமை வகித்தார். தாவரவியல் துறைத் தலைவர் வாசுதேவன் வரவேற்றார். தியாகராஜர் கல்லுாரி தாவரவியல் துறைத் தலைவர் கண்ணன் பேசினார். அனைவருக்கும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாக்கியராஜ் நன்றி கூறினார். கலைத் திருவிழா
மதுரை: தியாகராஜர் கல்லுாரியின் 75 வது ஆண்டுவிழாவை முன்னிட்டு 'சங்கமம் - 24' என்ற தலைப்பில் மாணவர்களுக்கான கலைத்திருவிழா நடந்தது. முதல்வர் பாண்டியராஜா முன்னிலை வகித்தார். மாணவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் இசை, நாடகம், ஓவியம், நெருப்பிலா சமயல், ரங்கோலி உட்பட 16 வகை போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எழுத்தாளர் பாக்கியம் சங்கர் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இணை பேராசிரியை செந்தில்வீரகுமாரி தலைமையில் ஒருங்கிணைத்தனர். சொற்பொழிவு
மதுரை: லேடி டோக் கல்லுாரியில் சமூக அறிவியல் துறை சார்பில் பேராசிரியை எலிசபெத் ஜார்ஜ் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு நடந்தது. பேராசிரியை ஏலிஸ் எலிசா செரினா வரவேற்றார். முதல்வர் கிறிஸ்டியானா சிங் துவக்கி வைத்து பேசினார். 'தற்போதைய இந்திய சமூக அரசியல் சூழல்' என்ற தலைப்பில் பேச்சாளர் ஜகத் கஸ்பர் ராஜ் பேசினார். முன்னாள் முதல்வர் சாந்தி மேனுவல் நினைவாக தலைமைத்துவ விரிவுரை தொடர் மையம் நிறுவப்பட்டது. பேராசிரியைகள், பெண்ணுரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேராசிரியை தனலட்சுமி வரவேற்றார். பேராசிரியை வித்யாலட்சுமி நன்றி கூறினார்.