உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு

இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு

மதுரை, : மதுரை மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கு ஒரு மையம் என 10 மையங்களில் நடந்த இப்பயிற்சி வகுப்பில் 13 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு ஓட்டுச் சாவடியில் வாக்காளர்களுக்கு ஓட்டுப்பதிவு நடத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.இப்பயிற்சி வகுப்பின்போது அவர்களுக்கு தபால் ஓட்டு அளிப்பதற்கான ஓட்டுச் சீட்டுகளும் வழங்கப்பட்டன. மதுரை தொகுதிக்கானவர்கள், மதுரை மாவட்டத்தில் உள்ள தேனி, விருதுநகர் தொகுதிகளுக்கானவர்கள் ஓட்டுச் சீட்டை பதிவு செய்து பெட்டியில் போட்டனர். மதுரை தவிர்த்த பிற தொகுதிகளுக்கான ஓட்டுச் சீட்டுகள் அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரிகளிடம் மதுரை தேர்தல் அதிகாரிகளே அனுப்பி விடுவதாக தெரிவித்தனர்.ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஓட்டுச் சீட்டுகளை பொருத்தும் பணி ஏப்.10 ம்தேதி அந்தந்த உதவித் தேர்தல் அதிகாரிகள் மூலம் நடத்தப்பட உள்ளது. இதற்காகன ஓட்டு சீட்டுகள் விரைவில் வழங்கப்பட உள்ளது. அவற்றை பெல் நிறுவனத்தில் இருந்து வரும் ஊழியர்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பொருத்துவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை