கோயில்ஆடிப் பெருந்திருவிழா 8ம் நாள்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், தங்கப்பல்லக்கில் எழுந்தருளல், காலை 7:00 மணி, குதிரை வாகனத்தில் எழுந்தருளல், மாலை 6:00 மணி.ஆடித்திருவிழா: ஊருணிக்கரை முத்துமாரியம்மன் கோயில், அனுப்பானடி, மதுரை, ஊர் பொங்கல், மாவிளக்கு, காலை 8:00 மணி, முளைப்பாரி திருவிழா, மாலை 6:00 மணி.ஆடி களரி உற்ஸவம்: ஜெனகை மாரியம்மன், நாகம்மாள், மடப்புரம் காளி, விநாயகர், முருகன், கருப்பணசாமி கோயில், சாரதி நகர், திருப்பாலை, சிறப்பு அலங்காரம், காலை 11:00 மணி, விளக்கு பூஜை, ஏற்பாடு: ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம், மாலை 5:00 மணி.ராதாமாதவ கல்யாண மஹோத்ஸவம், பாகவத மேளா: 2 ஏ, பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, தலைமை: ஆய்க்குடி குமார் பாகவதர், ஆதித்யா ரமேஷ் பாகவதர் குழுவின் தோடய மங்களம், குரு கீர்த்தன அஷ்டபதி, தொடர்ச்சி தரங்கம், காலை 8:30 மணி, ரவி, வெங்கட கிருஷ்ண பாகவதர்களின் இணைந்த பஞ்சபதி பூஜை, மதியம் 2:00 மணி, அனைத்து பாகவதர்களின் நகர சங்கீர்த்தனம், மாலை 5:30 மணி, ஜெயராம் பாகவதரின் தியானம், திவ்ய நாமம், இரவு 7:00 மணி, பிரகாஷ் பாகவதர் குழுவின் டோலோத்ஸவம், இரவு 11:00 மணி.பவுர்ணமி வழிபாடு: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட் பிரகாச வள்ளலார், மாலை 6:30 மணி.ஸித்த நரஹரி குரு ஆடிப்பூராட 102வது ஜெயந்தி விழா: ஸித்தாச்ரமம், 4, மாரியம்மன் தெப்பக்குளம் மேல வீதி, மதுரை, தலைமை: தலைவர் கீதாபாரதி, துவக்கிவைப்பவர்: லட்சுமி நாராயணன், அனிதா, வேள்வி நடத்துநர்: மதுரை புரோஹித வைதீக மகா சபை தலைவர் சேதுராம அய்யங்கார், அருளுரை: திண்டுக்கல் ராமகிருஷ்ண ஆசிரமம் தலைவர் நித்ய சத்வானந்தா சுவாமி, காலை 8:30 மணி முதல், அன்னதானம், மதியம் 12:00 மணி.சிறப்பு வழிபாடு: சாரதா ஸமிதி, லட்சுமி நாராயணபுர அக்ரஹாரம், சிம்மக்கல், மதுரை, நிகழ்த்துபவர்: சுவாமி சத்யானந்தா, சுவாமி அக் ஷரானந்தா, காலை 6:30 மணி.பவுர்ணமி பூஜை: ஆனந்தேஸ்வர விநாயகர் ஆஸ்திக சபா, எல்லீஸ் நகர், மதுரை, மாலை 6:00 மணி.பக்தி சொற்பொழிவுதாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.ராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும்: நிகழ்த்துபவர் - சுவாமி அர்க்கபிரபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.அஷ்டா வக்கிர கீதை: நிகழ்த்துபவர் - ஜனார்த்தனன், வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.புத்துார் சுதர்சன உ.வே.கிருஷ்ணசாமி அய்யங்கார் சுவாமியின் நுாற்றாண்டு விழா உபன்யாசம்: நிகழ்த்துவோர் - புத்துார் ரகுராமன் சுவாமி, வானமாமலை வகுளாபரணன் சுவாமி, ஜகந்நாத ராமானுஜதாசர், கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, ஏற்பாடு: அகில பாரத ஸ்ரீ வைஷ்ணவ மகா சபை, மாலை 5:00 மணி.பொதுஉயர்நீதிமன்ற மதுரை கிளையின் 20வது ஆண்டு விழா: தமுக்கம் மைதானம், மதுரை, வரவேற்புரை: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், பங்கேற்பு: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் மகாதேவன், சுந்தரேஷ், காலை 9:30 மணி.ஜெமினி சர்க்கஸ் துவக்க விழா: யு.சி. பள்ளி மைதானம், அரசரடி, மதுரை, துவக்கி வைப்பவர்: மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், துணை மேயர் நாகராஜன், இரவு 7:00 மணி.யாதுமாகி நின்றாய் சக்தி - பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், புதுநத்தம் ரோடு, மதுரை, மகளிர் மருத்துவம் பற்றி பேசுபவர்: டாக்டர் ஹேமலதா, மாலை 5:00 மணி.மதுரை வாசகர் வட்டம் சார்பில் சிறப்புரை கூட்டம்: அல்அமீன் மேல்நிலைப்பள்ளி, கே.புதுார், மதுரை, தலைமை: சண்முகவேலு, சிறப்புரை: எழுத்தாளர் சோழ நாகராஜன், காலை 10:00 மணி.பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் விழா: சவுராஷ்டிர சபை, மீனாட்சி அம்மன் கோயில், சக்கிமங்கலம், மதுரை, ஏற்பாடு: ஸ்ரீமந் நாயகி இயக்கம், மாலை 5:00 மணி.பள்ளி, கல்லுாரிதேசிய புள்ளியியல் தினத்தை முன்னிட்டு கலை போட்டிகள்: பாத்திமா கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: புள்ளியியல், கணித துறை, காலை 10:00 மணி.கண்காட்சிநகைகள் கண்காட்சி, விற்பனை: பூம்புகார் நிறுவனம், சிப்காட், புதுார், மதுரை, காலை 10:00 மணி முதல்.மான்சரோவர் ஆடை கண்காட்சி, விற்பனை: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 மணி முதல்.மருத்துவம்இலவச கண் பரிசோதனை முகாம்: ஸ்ரீ ராம்சந்திரா கண் மருத்துவமனை, குட்ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.அக்குபஞ்சர் மருத்துவ விழிப்புணர்வு, இலவச சிகிச்சை முகாம்: பாதே சத்திரம், அழகர்கோவில், ஏற்பாடு: அக்குபஞ்சர் மருத்துவர்கள் ஆசிரியர்கள் சங்கம், காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.விளையாட்டுபள்ளிகளுக்கிடையேயான டி.வி.சுந்தரம் ஐயங்கார் நினைவு மாநில கையுந்து பந்தாட்ட போட்டிகள்: டி.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி, லட்சுமிபுரம், மதுரை, பரிசளிப்பவர்: முன்னாள் மாணவர் சுரேஷ், காலை 10:00 மணி.