உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பறவைகளுக்கு இரையாகும் தக்காளி கூலிக்குகூட விலை கிடைக்காததால்...

பறவைகளுக்கு இரையாகும் தக்காளி கூலிக்குகூட விலை கிடைக்காததால்...

பேரையூர் : பேரையூர் தாலுகாவில் சந்தையூர், பாப்பிநாயக்கன்பட்டி, செல்லாயிபுரம், அதிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் 1000க்கும் மேற்பட்ட ஏக்கரில் தக்காளி பயிரிடப்பட்டது. நல்ல விளைச்சல் இருந்தும் விலையில்லாததால் விவசாயிகள் பறிப்பதை தவிர்க்கின்றனர்.ஒரு கூடை (15 கிலோ) தக்காளி ரூ.120க்கு விற்கின்றனர். இதில் கமிஷன் போக ரூ.100 தான் விவசாயிக்கு கிடைக்கும். ஒரு நாள் தக்காளி பறிப்பவரின் கூலி ரூ.300. மூன்று கூடைக்குதான் தக்காளி கிடைக்கும். கூலிக்கு கூட வரவில்லை. விலையில்லாததால் பறிக்காமல் விட்டதால் அவை செடியிலே அழுகி வருகின்றன.விவசாயிகள் கூறுகையில், ''ஆறு கூடை பறிப்பதற்கு ரூ.600 கூலி செலவாகிறது. நாங்கள் பாடுபட்டதற்கு வருமானம் எதுவும் இல்லை. அதனால் பறவைகளுக்கு இரையாகட்டும் என்று விட்டு விட்டோம்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













சமீபத்திய செய்தி