உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பேரையூரில் எரியூட்டும் குப்பையால் கருகும் மரங்கள்

பேரையூரில் எரியூட்டும் குப்பையால் கருகும் மரங்கள்

பேரையூர் : பேரையூரில் வீடுகளின் அருகே குப்பையை எரிப்பதால் மரங்கள் தீயில் கருகுகின்றன.பேரையூர் பேரூராட்சியின் 15 வார்டுகளுக்கும் தலா ஒரு பேட்டரி ஆட்டோ வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக குப்பை அள்ள புதிய டிராக்டர் வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இன்று காட்சிப் பொருளாகவே உள்ளன.வீடுகளில் குப்பை சேகரிக்க மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளனர். இத்தனை வசதி இருந்தும் சரியான நிர்வாகம் இல்லாததால் துாய்மை பணியாளர்கள் வீடுகளின் அருகே குப்பையை எரிக்கின்றனர். இதனால் வீடுகளில் வளர்க்கும் மரங்கள் தீக்கிரையாகி வருகின்றன. மரம் வளர்க்க ஊக்குவிக்க வேண்டிய பேரூராட்சி, மரங்களை தீக்கிரையாக்க காரணமாக உள்ளது. மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வாங்கும் பல பேரூராட்சிகள், மக்கும் குப்பையில் உரம் தயாரிக்கின்றன. இங்கு அது ஏட்டினில் உள்ளதே தவிர, செயலில் இல்லை. மாதம் ஒருமுறை மாவட்ட நிர்வாகம் ஆய்வு என்ற பெயரில் வந்து செல்கின்றனர். அதனாலும் பயனில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை