உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வடமாநில பிரசாரத்திற்கு ஸ்டாலின் ஏன் செல்லவில்லை: ராஜன்செல்லப்பா கேள்வி

வடமாநில பிரசாரத்திற்கு ஸ்டாலின் ஏன் செல்லவில்லை: ராஜன்செல்லப்பா கேள்வி

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க., சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலர் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலர் முருகன் முன்னிலை வகித்தார்.மாவட்ட செயலர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., துவக்கி வைத்து கூறியதாவது: 'இண்டியா' கூட்டணியில் உள்ள ஸ்டாலின் வடமாநிலங்களில் பிரசாரத்துக்கு செல்லவில்லை. காரணம் அவர்கள் வெற்றி பெற முடியாது. இதனால் கொடைக்கானல் சென்றுள்ளார். தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து விட்டது. போலீஸ் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை.ஆளுங்கட்சி நிர்வாகிகள்தான் கஞ்சா கடத்தலில் ஈடுபடுகின்றனர். மணல் கடத்தல், கள்ள மது விற்பது குறித்து தகவல் சொல்லும் சமூக ஆர்வலர்கள் தாக்கப்படுகிறார்கள். ரகசியத்தை பாதுகாக்க வேண்டிய போலீசார் கருப்பு ஆடு போல் செயல்படுகிறார்கள். தமிழகத்தில் கடும் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது என்றார். நிர்வாகிகள் முருகேசன், பாலமுருகன், செல்வக்குமார், மோகன்தாஸ் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை