உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கல்குவாரிக்கு தடை கோரி வழக்கு

கல்குவாரிக்கு தடை கோரி வழக்கு

மதுரை: மேலுார் அருகே புளிமலைப்பட்டி கணேஷ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:உறங்கான்பட்டியில் பழமையான மலைகந்தன் முருகன் கோயில் உள்ளது. அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்டது. கோயில் அமைந்துள்ள மலையின் ஒரு பகுதியில் கல்குவாரி அமைக்க டெண்டர்விட அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குவாரி அமைத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். குவாரி அமைக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு மதுரை கலெக்டர், கனிமவள உதவி இயக்குனர், மேலுார் தாசில்தார் தற்போதைய நிலை குறித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை