உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பல் சிகிச்சைக்காகவே மதுரை வந்த அமெரிக்கர்

 பல் சிகிச்சைக்காகவே மதுரை வந்த அமெரிக்கர்

மதுரை: அமெரிக்காவில் நவீன மருத்துவ வசதிகள் உள்ள நிலையில், பல் சிகிச்சைக்காக அங்கிருந்து ஒருவர் மதுரை வந்து ஆச்சரியப்படுத்தி உள்ளார். அவர் டேவ் வேர்ட்ஸ். சிலை வடிவமைப்பாளரான இவர், அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் வசிக்கிறார். பற்களில் அடிக்கடி வலி வருவதும், அதற்கு தற்காலிக தீர்வு பெறுவதுமாக இருந்தார். பின்னர் நண்பர் மூலம் மதுரை நளா பல் மருத்துவமனைக்கு வந்து மேல் தாடைக்கு இம்பிளான்ட் நிரந்தர பற்கள் பொருத்தி கொண்டார். 7 ஆண்டுகள் கழித்து கீழ் தாடை பற்களில் பிரச்சனை வந்த போது, அமெரிக்காவில் இருந்து நளா பல் மருத்துவமனையை தேடி வந்தார். அவருக்கு டாக்டர் ஜெ. கண்ண பெருமான் நவீன சிகிச்சை முறைகளால் இம்பிளான்ட் நிரந்தர பற்கள் பொருத்தினார். டேவ் வேர்ட்ஸ் கூறியதாவது: முதல் முறையாக வந்த போதே எனக்கு இம்மருத்துவமனையின் சிகிச்சை மிகவும் பிடித்து விட்டது. டாக்டர் கண்ணபெருமானின் திறமை, சிகிச்சை முறை, பொருத்தப்பட்ட பற்கள் அனைத்தும் மிக திருப்தியாக இருந்தது. எனவே கீழ் தாடையின் பற்களில் நிரந்தர பற்கள் பொருத்துவதற்காகவே இங்கு வந்தேன். சிகிச்சைக்கு பின், எனக்கு மிகவும் பிடித்த முறுக்கு, தோசையை ருசித்து சாப்பிட்டேன். இன்னும் மதுரையின் உணவுகளை சுவைக்க ஆர்வமாக உள்ளேன். மீனாட்சி அம்மன் கோயில், திருவனந்தபுரம், ஏற்காடு போன்ற இடங்களை பார்த்தேன். திருப்தியும் மகிழ்ச்சியுமாக அமெரிக்கா செல்ல உள்ளேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை