உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பாதுகாப்பில்லாத மருத்துவமனை

பாதுகாப்பில்லாத மருத்துவமனை

பேரையூர் : பேரையூர் தாலுகா அலுவலகம் அருகே, கால்நடை மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் அமைக்காததால், பாதுகாப்பாற்ற நிலை உள்ளது. விஷஜந்துகளின் நடமாட்டம் மிகுந்த பகுதியாக மாறி வருகிறது.மாலை நேரத்தில் குடிமகன்களின் கூடாரமாக மாறியுள்ளது. மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் கட்ட கால்நடை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை