உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  கால்வாயில் தடுப்பு: விவசாயிகள் கடுப்பு

 கால்வாயில் தடுப்பு: விவசாயிகள் கடுப்பு

சோழவந்தான்: 'சோழவந்தான் அருகே சித்தாலங்குடியில் பாசன உபரிநீர் கால்வாயில் அனுமதியின்றி வைத்த தடுப்புகளை அகற்ற வேண்டும்' என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயி ராஜகோபாலன் கூறியதாவது: சித்தாலங்குடி, ஆனைக்குளம் கண்மாய்களில் வெளியேறும் உபரி நீர், கால்வாய் வழியே தோடனேரிக் கண்மாய்க்குச் செல்கிறது. ஆத்திமரத்தான் கோயில் பகுதி கால்வாயில் விவசாயிகள் பலர் அனுமதியின்றி பல இடங்களில் செயற்கை தடுப்புகளை ஏற்படுத்தி, தங்கள் விவசாய நிலங்களுக்கு தண்ணீரை திருப்புகின்றனர். இதனால் தண்ணீர் எளிதாக செல்ல முடியாமல் தேங்குகிறது. பிற பகுதி நிலங்களில் இருந்து வெளியேறும் உபரிநீரும் இக்கால்வாயிலேயே சேருகிறது. தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டதால் மழைக்காலங்களில் சாகுபடி நிலங்களில் பெய்யும் அதிக மழை நீர் வெளியேற முடியாமல் வயலிலேயே தேங்குகிறது. இதனால் பயிர்கள் சேதம் அடைந்து நஷ்டம் ஏற்படுகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுப்புகளை அகற்ற வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை