உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜல்லிக்கட்டில் ஜாதி பெயர் குறிப்பிடப்படாது: அமைச்சர் அவனியாபுரம் வாடிவாசலால் சிக்கல்: எம்.எல்.ஏ.,

ஜல்லிக்கட்டில் ஜாதி பெயர் குறிப்பிடப்படாது: அமைச்சர் அவனியாபுரம் வாடிவாசலால் சிக்கல்: எம்.எல்.ஏ.,

அவனியாபுரம், : நீதிமன்ற உத்தரவின்படி ஜல்லிக்கட்டில் ஜாதி பெயர் குறிப்பிடப்படாது. காளையின் பெயர், ஊர் மட்டுமே குறிப்பிடப்படும்'' என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். மதுரை அவனியாபுரத்தில் அவர் கூறியதாவது: நீதிமன்ற உத்தரவின்படி ஜல்லிக்கட்டு நிகழ்வில் ஜாதி பெயர் குறிப்பிடப்படாது. காளையின் பெயர், ஊர் மட்டுமே குறிப்பிடப்படும். இந்தாண்டு ஆயிரம் காளைகளை அவிழ்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளோம். வாடிவாசல் பின்புறம் கூடுதலாக கதவு அமைக்கப்பட்டுள்ளது. பரிசுப் பொருட்களை இந்தாண்டு வெற்றி பெற்றவர்களின் கையில் கொடுக்கப்படும். தமிழக முதல்வர் ஜல்லிக்கட்டு மீது ஈடுபாடு கொண்டவர். அதனால் தான் ஜல்லிக்கட்டுக்கு தனி அரங்கம் அமைத்து ஜன. 23ல் அங்கு போட்டிகள் நடத்துவது குறித்து அறிவிக்கப்படும், என்றார்.

அவனியாபுரம் வாடிவாசலால் சிக்கலா

அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா கூறியதாவது: அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கான வாடிவாசலில் இந்தாண்டு புதிய அமைப்பை உருவாக்கியுள்ளனர். இதனால் காளைகளும், உரிமையாளர்களும் வெளியில் வருவதற்கு சிக்கல் ஏற்படும். இதுகுறித்து யாரிடமும் கருத்து கேட்காமல் அதிகாரிகளே முடிவு செய்துள்ளனர். அலங்காநல்லுார், பாலமேட்டில் நிரந்தர வாடிவாசல் உள்ளது. இங்கு தற்காலிகமாகத்தான் அமைக்கப்படுகிறது. ஊர்மக்கள் விரும்பினால் எம்.எல்.ஏ., நிதியிலிருந்து நிரந்தர வாடிவாசல் அமைக்க தயார். குலுக்கல் முறையில் காளைகளை தேர்ந்தெடுப்பது சில நேரம் சரியானதாக இருந்தாலும், நல்ல திறமையான காளைகள் பங்கேற்க முடியாமலும் போய்விடுகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை