| ADDED : பிப் 06, 2024 12:38 AM
மதுரை : மதுரையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனம் (சிப்போ) இணைந்து தொழில்முனைவோருக்கான திறன் மேம்பாட்டு இலவச பயிற்சி வகுப்புகள் மஹபூப்பாளையம் 'சிப்போ' அலுவலகத்தில் துவங்கவுள்ளன.களிமண், காகித கூழ் பொம்மைகள் தயாரிப்பு பயிற்சி, மண்பாண்ட கலை திறன்மேம்பாட்டு பயிற்சிகள் முறையே 1 -3 மாதப் பயிற்சிகளாக அளிக்கப்படவுள்ளது. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 - 35 வயதுள்ள இருபாலரும் சேரலாம். பயிற்சியில் மாதம் ரூ.12,500 உதவித் தொகை, மதிய உணவு, பயிற்சி கையேடு, பயிற்சிக்கு பின் சான்றிதழ், தொழில் துவங்க ஆலோசனைகள் வழங்கப்படும்.விருப்பம் உள்ளோர் 'சிப்போ அலுவலகம், 52 டி.பி., ரோடு, மஹபூப்பாளையம், மதுரை -16' என்ற முகவரியில் அல்லது 0452 - 260 2339ல் தொடர்புகொள்ளலாம் என பொது மேலாளர் பழனிவேல்முருகன் தெரிவித்துள்ளார்.