உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கொத்தடிமை குறித்து கலந்தாய்வு கூட்டம்

கொத்தடிமை குறித்து கலந்தாய்வு கூட்டம்

சோழவந்தான்: சோழவந்தான் ஆர்.ஐ., அலுவலகத்தில் கொத்தடிமை பணியாளர்கள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ., கருணாகரன் தலைமை வகித்தார். தாசில்தார் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள கல்குவாரிகள், செங்கல் சூளைகள், தென்னந்தோப்புகளில் கொத்தடிமை பணியாளர்கள் உள்ளனரா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார், பி.டி.ஓ., பூர்ணிமா, இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சமூக ஆர்வலர்கள் அறிவழகன், சரவணகுமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை