உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  அரசியல் கேள்விகள் கேட்காதீங்க... மதுரையில் வைகோ டென்ஷன்

 அரசியல் கேள்விகள் கேட்காதீங்க... மதுரையில் வைகோ டென்ஷன்

மதுரை: மதுரையில் நிருபர்கள் சந்திப்பின்போது, மல்லைசத்யா குறித்து கேள்விகள் எழுப்ப முயற்சித்ததால் 'டென்ஷன்' ஆன ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ, அரசியல் கேள்விகள் கேட்காதீர்கள். நான் சொல்வதை மட்டும் செய்தியாக வெளியிடுங்கள். விதண்டவாதமான கேள்விகளுக்கு பதில் இல்லை என சீறினார். ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ துவங்கவுள்ள போதை கலாசாரத்திற்கு எதிரான சமத்துவ நடைபயணத்திற்கு உறுப்பினர்கள் சேர்க்கைக்கான நேர்காணல் மதுரையில் நடந்தது. அப்போது அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் நடைப்பயணமாக இதுவரை 7000 கி.மீ., நடந்துள்ளேன். தற்போது மதுவை விட கஞ்சா, போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. பள்ளி மாணவர்கள் போதைப் பொருளை பயன்படுத்துகின்றனர். போதைப்பொருளை பயன்படுத்துவதால் இளம்பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடக்கிறது. சில இடங்களில் பெண்கள் போதைப்பொருளை பயன்படுத்துகின்றனர் என்பது அதிர்ச்சி தகவலாக உள்ளது. அரிவாள், பட்டாகத்தியுடன் மாணவர்கள் கல்லுாரிக்கு செல்கின்றனர். இவற்றிலிருந்து இளைஞர்கள், மாணவர்களை மீட்கவே இந்த விழிப்புணர்வு சமத்துவ நடைபயணம் செல்லவுள்ளேன். ஜன.,2ல் திருச்சியில் துவங்கி 12ல் மதுரையில் நிறைவடையும். முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இப்பயணத்தில் மது, புகை பழக்கம் உள்ளவர்களை சேர்க்க மாட்டேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை