உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வானரங்களைப் பிடித்து வனப்பகுதியில் விடமாட்டீங்களா மனஉளைச்சலில் மேலுார் பக்தர்கள்

வானரங்களைப் பிடித்து வனப்பகுதியில் விடமாட்டீங்களா மனஉளைச்சலில் மேலுார் பக்தர்கள்

மேலுார்: மேலுார் சிவன் கோயிலில் சுற்றித் திரியும் குரங்குகளால் பக்தர்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.மேலூரில் பழமையான கல்யாணசுந்தரேஸ்வரர், காமாட்சியம்மன் கோயில் உள்ளது. தினமும் தாலுகா முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.முகூர்த்த தினங்களில் பக்தர்கள் வருகை பல ஆயிரங்களை தாண்டும். இந்தக் கோயிலில் குரங்குகள் தொல்லை அதிகளவில் உள்ளது. சுவாமி தரிசனத்திற்கு வருவோர் குரங்குகளால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாவதாக வேதனை தெரிவித்தனர்.பக்தர்கள் கூறியதாவது: இக்கோயிலில் வானரங்கள் தொந்தரவு அதிகமாக இருப்பதால் அச்சத்துடனே வருகிறோம். அவை பக்தர்கள் பூஜைக்கு கொண்டு வரும் பழம், தேங்காயை பறித்துச் செல்கின்றன. தடுப்போரை மிரட்டி பயமுறுத்துகின்றன. பயந்து ஓடும் சிறுவர்களை விரட்டிக் கடிக்கிறது. மன அமைதிக்காக கோயிலுக்கு வந்தால் குரங்குகளால் கூடுதல் மனஉளைச்சல் ஏற்படுகிறது.வனத்துறை அதிகாரிகள் இந்த வானரங்களைப் பிடித்து வனப்பகுதியில் கொண்டு விடவேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை