உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நீர்வளத்துறை அலட்சியத்தால் அழிந்த மடைகள் தண்ணீர் இருந்தும் தரிசாகுது நிலங்கள்

நீர்வளத்துறை அலட்சியத்தால் அழிந்த மடைகள் தண்ணீர் இருந்தும் தரிசாகுது நிலங்கள்

மேலுார்: புதுசுக்காம்பட்டி சிறுமேலம் கண்மாயில் தண்ணீர் இருந்தும் மடைகளை பராமரிக்காததால் தண்ணீர் வெளியேற வழியின்றி விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருவதாக நீர்வளத்துறையினர் மீது புகார் எழுந்துள்ளது.புதுசுக்காம்பட்டியில் 66 ஏக்கர் பரப்பில் நீர்வளத்துறையின் சிறுமேலம் கண்மாய் உள்ளது. இக் கண்மாய்க்கு 12 வது பிரதான கால்வாயில் இருந்து எட்டிமங்கலத்தில் 4 வது பிரிவு கால்வாய் வழியாக வரக்கூடிய தண்ணீரால் கண்மாய் நிரம்பி அதன் மூலம் ஏராளமான ஏக்கர் பயன் பெறும். இக் கண்மாய் அருகே புதுசுக்காம்பட்டி - பல்லவராயன்பட்டிக்கு மெயின் ரோடு செல்கிறது. அதனால் ரோட்டின் ஒரு புறத்தில் கண்மாயும், மறுபுறம் விவசாய நிலங்களும் உள்ளது. இக் கண்மாயில் உள்ள மடைகளை நீர்வளத்துறையினர் பராமரிக்காததால் அவை அழிந்துவிட்டன.விவசாயி பாண்டி கூறியதாவது: கண்மாயில் இருந்து விவசாய நிலங்களுக்கு செல்ல நீர்வளத்துறையினர் கட்டிய மடைகளும். ரோட்டின் கீழே செல்லும் சிமென்ட் குழாய்களும் பராமரிப்பின்றி அழிந்துவிட்டன. அதனால் கண்மாயில் தண்ணீர் இருந்தும் வெளியேற வழியின்றி விவசாய நிலங்கள் தரிசாக கிடக்கிறது. தண்ணீர் திறக்கும் முன்பே விவசாயிகள் நீர்வளத்துறை அதிகாரிகளை சந்திந்து மனு கொடுத்தும் சரி செய்யவில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்க நீர்வளத்துறை அதிகாரிகளே காரணம் என்றார்.நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர் கூறுகையில், நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை