உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தனியார்துறையில் வேலை வாய்ப்பு

 தனியார்துறையில் வேலை வாய்ப்பு

மதுரை: மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தொழில் வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (நவ.21) நடக்கிறது. இதில் தனியார் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. பத்தாம் வகுப்பு முதல் முதுநிலை பட்டம், ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் பங்கேற்று வேலைவாய்ப்பு பெறலாம். வேலைநாடுவோரும், வேலையளிக்கும் நிறுவனங்களும் http://www.tnprivatejobs.in.gov.inஎன்ற இணையதள முகவரியில் சுயவிவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். முகாமில் பங்கேற்போர் சுயவிவர படிவங்களுடன், கல்விச்சான்றிதழ்கள், ஆதார் நகல்கள், பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் நாளை காலை 10:00 மணிக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் வரலாம். இதில் வேலை பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவில் பாதிப்பு வராது என, துணை இயக்குனர் கண்ணன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை