| ADDED : மார் 20, 2024 12:33 AM
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் தேர்தல் ஆலோசனை கூட்டம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது.உதவி தேர்தல் அலுவலர் ரவிக்குமார் தலைமை வகித்தார். தாசில்தார்கள் அனீஸ் சத்தார், சரவணன், போலீஸ் உதவி கமிஷனர் குருசாமி, மின்துறை மாநகராட்சி, தீயணைப்புத் துறை, தேர்தல் கண்காணிப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா நடக்கிறது. மார்ச் 28ல் திருக்கல்யாணம், மார்ச் 29ல் தேரோட்டம் நடக்கிறது. இரு நிகழ்ச்சி களிலும், அரசியல் கட்சியினர் பக்தர்கள் பொதுமக்கள் அன்னதானம் வழங்குவதுடன் நீர்மோர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு வழங்குவர்.அவர்களுக்கும், திருமணங்கள், இல்ல விழாக்கள் நடத்துபவர்களுக்கும் தேர்தல் நடத்தையின் கீழ் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்ச்சிகளில் அரசியல் சார்பான நிகழ்ச்சிகள் நடத்துவோர் கலெக்டர் அலுவலகத்திலும், திருமணங்கள், இல்ல விழாக்கள் நடத்துவோர் திருப்பரங்குன்றம் தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் உதவி அலுவலரிடமும் மனு கொடுத்து அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உசிலம்பட்டி
தேர்தல் பயிற்சி கூட்டத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன், தாசில்தார்கள் சுரேஷ்பிரடரிக்கிளமண்ட், ரவிச்சந்திரன், அதிகாரிகள் பங்கேற்றனர். தேர்தல் முடியும் வரையில் அலைபேசியை எப்போதும் செயல்பாட்டில் வைத்திருங்கள். தேர்தலுக்கு குறைந்த அவகாசமே இருப்பதால், அவசர தகவல்கள் இதன் மூலம் தான் தெரிவிக்க முடியும் என ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.