உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல்

விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல்

மதுரை : வேளாண்மை துறையின் அட்மா திட்டத்தின் கீழ் மதுரை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தில் விவசாயிகள் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நடந்தது. 13 வட்டாரங்களில் இருந்து 25 விவசாயிகள் கலந்து கொண்டனர்.வேளாண் துணை இயக்குநர் அமுதன் வரவேற்றார். இணை இயக்குநர் சுப்புராஜ் இயற்கை விவசாயம் மூலம் அதிக மகசூல் பெறுவது பற்றியும், துணை இயக்குநர் மேரி ஐரின் ஆக்னிட்டா மண்வள அட்டை, உயிர் உரங்கள் பயன்பாடு குறித்தும், உதவி இயக்குநர் சக்திகணேஷ் உரம் பூச்சி மருந்து விற்பனை விதி முறை பற்றியும் பேசினர்.வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் வேளாண் கல்லுாரி விஞ்ஞானிகள் விவசாயிகளிடம் கலந்துரையாடினர். விளைப் பொருட்களை சந்தைப்படுத்துவது, மாற்றுப்பயிர் திட்டம், இயற்கை வேளாண்மை, பூச்சிகளின் தாக்குதல் கட்டுப்படுத்தும் முறைகளை எடுத்துரைத்தனர். திருச்சி பயிர் பாதுகாப்பு அலுவலர்கள் தேசிய பூச்சி மற்றும் நோய் கண்காணிப்பு அமைப்பு செயலி பயன்படுத்தும் முறையை விளக்கினர். வேளாண் அலுவலர் முத்து லட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி