உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சித்திரைத் திருவிழா தேசிய திருவிழா: நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தல்

சித்திரைத் திருவிழா தேசிய திருவிழா: நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தல்

மதுரை : மதுரையில் தென் இந்திய நுகர்வோர், மக்கள் உரிமை பாதுகாப்பு அமைப்பு சார்பில் மாநாடு, உலக நுகர்வோர் தினவிழா, விருதுகள் வழங்கும் விழா நடந்தது.தலைவர் மணவாளன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் சிங்கராஜூ முன்னிலை வகித்தார். மாநில அமைப்பாளர் வீரபத்திரன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர்கள் தியாகராஜன், சரவணன், ரவிபாண்டியன், ராஜ்கமல், ராமநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.மாநாட்டில் மதுரையில் மெட்ரோ ரயில்சேவையை விரைவில் துவங்க வேண்டும். மதுரையில் மாநில மனித உரிமை ஆணையத்தின் கிளையை துவக்க வேண்டும். உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும். சித்திரைத் திருவிழாவை தேசிய திருவிழாவாக அறிவிக்க வேண்டும். நுகர்வோர் சட்டங்களை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். டோல் கட்டணத்தை பாதியாக குறைக்க வேண்டும். மதுரை விமான நிலையத்தை சர்வதேச நிலையமாக அறிவித்து, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் நேரடி விமான சேவையை ஏற்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி