உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை ரயில்வே ஸ்டேஷனில் எஸ்கலேட்டர் அறையில் தீ

மதுரை ரயில்வே ஸ்டேஷனில் எஸ்கலேட்டர் அறையில் தீ

மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவு வாயில் எஸ்கலேட்டர் அறையில், நேற்று காலை 7:20 மணிக்கு திடீரென புகை வந்தது. இதனை கவனித்த ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.,) வீரர் மீனாட்சிசுந்தரம் அறைக்குள் பற்றி எரிந்த தீயை, தீயணைப்பான் கொண்டு அணைத்தார். தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் வந்து சேதமடைந்த மின் கேபிள்களை அகற்றினர். பயணிகள் சேவையில் பாதிப்பில்லை. இன்ஸ்பெக்டர் அஜித்குமார் மின்கசிவு காரணமா என விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை