உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தமுக்கத்தில் புகுந்த மழைநீர் உணவு ஸ்டால்கள் இடமாற்றம்

 தமுக்கத்தில் புகுந்த மழைநீர் உணவு ஸ்டால்கள் இடமாற்றம்

மதுரை: மதுரை தமுக்கத்தில் நடக்கும் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தும் 'சரஸ் மேளா' கண்காட்சியில் உணவுத் திருவிழா ஸ்டால்கள் இடம் பெற்ற பகுதிக்குள் மழைநீர் புகுந்ததால் அங்குள்ள ஸ்டால்கள் இடமாற்றப்பட்டன. மாநில ஊரக வாழ்வதாரம் இயக்கம் மூலம் நடக்கும் இக்கண்காட்சியை நவ.,22ல் துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார். தமுக்கம் உள்பகுதியில் 200க்கும் மேற்பட்ட ஸ்டால்களும், மைதானத்தில் உணவுத் திருவிழாவில் 50க்கும் மேற்பட்ட ஸ்டால்களும் அமைக்கப்பட்டன. நேற்றுமுன்தினம் இரவு முதல் பெய்த மழை காரணமாக உணவு திருவிழா ஸ்டால்களுக்குள் மழைநீர் புகுந்து, மக்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் ஸ்டால்கள் அனைத்தும் தமுக்கம் மாநாட்டு மையத்தின் உட்பகுதியில் மாற்றப்பட்டு மக்கள் பார்வையிடும் வகையில் வசதிகள் செய்யப்பட்டன. டிச.,3 வரை இத்திருவிழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி