உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தத்தனேரி மயானத்தில் குப்பைக் கிடங்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

 தத்தனேரி மயானத்தில் குப்பைக் கிடங்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை: மதுரை தத்தனேரி மயானத்தில் குப்பைக் கிடங்கு அமைக்க தடை கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத் தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. மதுரை மணிகண்டன் தாக்கல் செய்த பொது நல மனு: தத்தனேரி மயானத்தில் 'ஸ்வச் பாரத் மிஷன்' திட்டத்தின் கீழ் ரூ.10 கோடியில் குப்பைக் கிடங்கு அமைக்கப்படுகிறது. மாநகராட்சியின் 100 வார்டுகளில் சேகரிக்கும் குப்பை அங்கு கொண்டுவரப்படும். உரம், காஸ் தயாரிக்கப்படும். ஏற்கனவே மயானத்தில் தினமும் பிணங்களை எரிக்கின்றனர். காற்று மாசுபடுகிறது. குப்பைக் கிடங்கு அமைத்தால் மேலும் சுகாதாரக்கேடு ஏற்படும். அருகில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுவர். மக்கள் போராட்டம் நடத்தினர். குப்பைக் கிடங்கு அமைக்க தடை விதிக்க வேண்டும். நகருக்கு வெளியே மாற்று இடத்தை தேர்வு செய்து அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் விக்னேஷ் ஆஜரானார். நீதிபதிகள் கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தர விட்டு டிச.8க்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி