| ADDED : பிப் 07, 2024 07:13 AM
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்ப உயர் மின்விளக்கு(ைஹமாஸ்) மற்றும் மாநகராட்சி மண்டலம் 5க்கு உட்பட்ட பகுதி சமுதாய கூடங்கள் சீரமைக்க ரூ.43.07 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி மண்டல தலைவர் சுவிதா தெரிவித்தார்.கோயில் முன்பு ரூ. 4.77 லட்சத்தில் ஹை மாஸ் மின் விளக்கு, ஹார்விப்பட்டியில் ரூ. 15.96 லட்சத்தில் சமுதாயக்கூடம் சீரமைப்பு, போர்வெல் அமைப்பு, 92 வது வார்டு எம்.எம்.சி. காலனியில் ரூ. 7.62 லட்சத்தில் சமுதாயக்கூடம் சீரமைப்பு, போர்வெல் அமைப்பு, 78 வது வார்டில் ரூ. 1.94 லட்சத்தில் சமுதாயகூடம் சீரமைப்பு, புதிய போர்வெல் அமைப்பு, 74வது வார்டில் ரூ. 12.78 லட்சத்தில் திருமண மண்டபம், சமுதாய கூடம் சீரமைப்பு பணிகள் விரைவில் துவங்க உள்ளதாக தெரிவித்தார்.