உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மாணவிகளுக்கு கராத்தே பட்டய தேர்வு

 மாணவிகளுக்கு கராத்தே பட்டய தேர்வு

வாடிப்பட்டி: வாடிப்பட்டி ஸ்ரீ கணேசா கராத்தே ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் அரசு பள்ளி மாணவிகளுக்கான கராத்தே பட்டய தேர்வு போட்டி நடந்தது. இதில் 100 மாணவிகள் பங்கேற்றனர். தனித்திறன், குழு, கட்டா, சண்டை பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. எஸ்.பெருமாள்பட்டி நடுநிலைப்பள்ளி முதலிடம், பாண்டியராஜபுரம் மதுரை சர்க்கரை ஆலை அரசு மேல்நிலைப்பள்ளி 2ம் இடம், சி.புதுார் ஊராட்சி நடுநிலைப்பள்ளி 3ம் இடம், குட்லாடம்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளி, கச்சைகட்டி உயர்நிலைப்பள்ளிகள் 4ம் இடம் பிடித்தன. வென்ற மாணவிகளுக்கு வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் பரிசு வழங்கினார். சென்சாய் கணேசன் பட்டயம் வழங்கினார். சி.புதுார் பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி முன்னிலை வகித்தார். அகாடமி செயலாளர் ராஜேஸ்வரி வரவேற்றார். பயிற்சியாளர் சந்துரு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ