மேலும் செய்திகள்
சந்தேகமா ... டாக்டரைக் கேளுங்கள்
4 hour(s) ago
குழந்தைகளும் பல் ஆரோக்கியமும்
4 hour(s) ago
காந்தாரா கண்டெடுத்த அய்ரா
4 hour(s) ago
மதுரை: மதுரையில் நடைபெற்று வரும் ரயில்வே ஸ்டேஷன் சீரமைப்பு பணிகள், கோட்ட செயல்பாடுகள் குறித்து தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் விபின் குமார் நேற்று ஆய்வு செய்தார். மதுரையில் ரூ.347.47 கோடியில் ரயில்வே ஸ்டேஷன் சீரமைப்பு பணிகள் நடக்கின்றன. கிழக்கு பகுதி டூவீலர் பார்க்கிங், மேற்கு பகுதி கார் பார்க்கிங் ஆகியவை பணிகள் நிறைவுற்று பயன்பாட்டில் உள்ளன. கிழக்கு பகுதி கார் பார்க்கிங், கிழக்கு, மேற்கு டெர்மினல்கள், பிளாட்பாரங்களின் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை விபி1ன் குமார் நேற்று ஆய்வு செய்தார்.கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, கடந்த 7 மாதங்களில் மதுரைக் கோட்டம் 29 மில்லியன் பயணிகளை கையாண்டுள்ளது. அக்டோபர் வரை சரக்கு போக்குவரத்தில் 10.11 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. ரயில் பாதைகள் 73 கி.மீ.,க்கு பலப்படுத்தப்பட்டுள்ளன. 48 கி.மீ.,க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளன. 4 'லெவல் கிராசிங்'குகள் 'இன்டர்லாக்கிங்' முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வேயில் முதன்முறையாக திண்டுக்கல், திருநெல்வேலியின் ரயில் பாதை மின்சார பராமரிப்பு பணிமனை, மதுரையின் ரயில் பாதை மின்சார பராமரிப்பு கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் கிடைத்ததாக கோட்ட மேலாளர் தெரிவித்தார். இதையடுத்து விபின் குமார், ''ரயில்வே துறை மக்களின் சேவைக்காக ஏற்படுத்தப்பட்டது. பயணிகளின் நலனுக்கு ஏற்ப கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். வரும் மார்ச்சுக்குள் கிழக்கு டெர்மினல் பணிகளை முடிக்க வேண்டும். ரயில் மதாத் செயலி மூலம் புகார்கள், ஆலோசனைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும்'' என வலியுறுத்தினார். ஆய்வின் போது கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் எல்.என்.ராவ், திட்ட இயக்குநர் ஹரிகுமார், கட்டுமான பிரிவு இணை முதன்மை பொறியாளர் ஞானசேகர் உடன் இருந்தனர். இன்று மதுரை - திருநெல்வேலி ரயில் பாதை, திருநெல்வேலி ஸ்டேஷன் சீரமைப்பு பணிகளை விபின் குமார் ஆய்வு செய்கிறார்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago