உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தேசிய பெண் குழந்தைகள் தினம்

தேசிய பெண் குழந்தைகள் தினம்

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே குறவன்குளம், சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் நகரி பிரிட்டானியா நியூட்ரிசன் பவுண்டேஷன் சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.பெண் குழந்தைகளின் உரிமைகள், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான பேச்சு, கட்டுரை, ஓவியம், தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு சான்றிதழ் வழங்கப்பட்டது.பவுண்டேஷன் திட்ட அலுவலர் ரஞ்சிதா பரிசுகளை வழங்கினார். களப்பணியாளர்கள் ஆனந்த், பானுப்ரியா, தேவிபிரியா, வாஞ்சிநாதன், ஜஹின் மற்றும் மன்னா புட்ஸ் பணியாளர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை